Best Minimally Invasive Cardiac Surgery

தொடர்புக்கு

அப்போலோ மருத்துவமனை வழங்கும் ரோபோடிக் சிறுதுளை பைபாஸ் சிகிச்சை - இருதய நோய்க்கான பாதுகாப்பான அதிநவீன சிகிச்சை

சுருக்கமாக

வழக்கமான பைபாஸ் சிகிச்சை என்பது இருதய நோய் ஏற்பட்டவரின் நெஞ்சுக்கூட்டை அறுவைசிகிச்சை மூலம் திறந்து வழங்கப்படும். அறுவை சிகிச்சையின் போது இருதயத்தை துடிக்கவைக்க ஒரு இயந்திரம் பொருத்தப்படும் (beating heart machine). நோயாளர் குணமடைய பலநாட்களாகும். நிருபிக்கப்பட்ட பலன்களை பைபாஸ் அறுவைசிகிச்சையின் மூலம் பெறலாம் எனினும், தற்பொழுது வழக்கத்திற்கு வந்துள்ள ரோபோ உதவியுடன் வழங்கப்படும் சிறுதுளை பைபாஸ் சிகிச்சைகளில், மிகச்சிறிய காயம், மிகத்துல்லியமான சிகிச்சை என பலன்கள் மிக அதிகம். இந்த வகை சிகிச்சையில் சிகிச்சை பெற்றவருக்கு வலி மிகக்குறைவாக ஏற்படும், அவரால் விரைவில் குணமடைய முடியும், சிகிச்சையின் பலன்களும் திறந்தநிலை பைபாஸ் சிகிச்சையினை ஒத்திருக்கும்.


ரோபோ அசிஸ்டெட் பைபாஸ் சிகிச்சை என்றால் என்ன?

விலா எலும்புகளின் நடுவே சிறுதுளையிட்டு (keyhole) ரோபோ உதவியுடன் செய்யப்படும் பைபாஸ் அறுவைசிகிச்சை இது. இடப்பட்ட துளையின் மூலம் சிறிய புகைப்பட கருவியும் ரோபோவின் எந்திர கைகளும் உள்ளே நுழைக்கப்படும். இருதயம் துடிக்கும் போதே பிரத்யேக கருவிகள் நோய் பாதித்த பகுதியை நிலைநிறுத்தி, அறுவைசிகிச்சை மேற்கொள்ள துணைபுரியும்.


நன்மைகள்

  • குறைந்த தசை சேதம்
  • குறைந்த வலி
  • மிகக்குறைந்த கிருமித்தொற்று விகிதம்
  • குறைந்தபட்ச உதிரப்போக்கு
  • குறைவான மருத்துவமனை வாசம் (வழக்கமாக 48 மணிநேரம்)
  • அதிவேக நிவாரணம் (2 வாரங்களில் பணிக்கு திரும்பலாம்)
  • சிறிய தழும்புகள்


இந்த கோவிட்-19 கொள்ளைநோய் பரவும் காலகட்டத்தில், சிறுதுளை வழி இருதய சிகிச்சைகள் எவ்வகையில் நன்மையளிக்கும்?


பிரதான கேள்விகள்


சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

நோயாளிக்கு முழுமயக்க நிலையில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். இடப்பக்க நெஞ்சு பகுதியில் இடப்படும் சிறுதுளைகளின் மூலம், அறுவைசிகிச்சை கருவிகள் ரோபோவின் எந்திர கைகளில் பொருத்தி, ஒரு புகைப்பட கருவியுடன் உள்ளே செலுத்தப்படும். அறுவைசிகிச்சை அரங்கில் தனியாக அமைந்திருக்கும் கட்டுப்பாட்டு பகுதியில் அமர்ந்து இந்த ரோபோவின் கைகளை அறுவைசிகிச்சை நிபுணர் இயக்கி, சிகிச்சையை மேற்கொள்ளுவார். சிகிச்சை முடிந்ததும், கருவிகள் வெளியே எடுக்கப்பட்டு, நெஞ்சில் இடைப்பட்ட துளைகள் மூடப்படும்.

சிகிச்சை எவ்வளவு நேரம் நடக்கும்?

வழக்கமான திறந்தநிலை பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ள ஆகும் அதே கால அளவு தான் இந்த ரோபோடிக் சிறுதுளை பைபாஸிற்கும். எனினும் தீவிர சிகிச்சை பிரிவு வாசம் மிகக்குறைவு, இதர சிக்கல்களும் ஏற்படுவது குறைவு என்பதால் சிகிச்சை பெற்றவர் அதிவிரைவில் குணமடைவார்.

குணமாகும் நேரம் பொறுத்து, சிகிச்சை முடிந்த 48 மணிநேரத்தில் நோயாளர் வீடு திரும்பலாம். ஆனால் முழு உடல் தகுதி பெற 2 வாரங்கள் ஆகும்.

சிகிச்சை முடிந்து குணமடையும் காலம் எப்படி இருக்கும்?

வழக்கமான சிறுதுளை பைபாஸ் சிகிச்சையை விட ரோபோட்டிக்-அசிஸ்டெட் பைபாஸில் நோயாளி மிகவேகமாக குணமடைவார்.

பொதுவாக, தீவிர சிகிச்சை பிரிவில் ஒருநாள் இருக்க நேரிடும். நாளவழியில் (Intravenous) மருந்துகளும் இதர சத்துக்களும் வழங்கப்படும். சிறுகுழாய்கள் மூலம், சிறுநீர், மற்றும் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நெஞ்சுப்பகுதியில் இருந்து நீர் வெளியேற்றப்படும்.

தீவிர சிகிச்சை அறையிலிருந்து வழக்கமான மருத்துவமனை படுக்கைக்கு நோயாளி மாற்றப்படும் நேரம் முற்றிலும் அவரின் உடல்நிலை மற்றும் அறுவைசிகிச்சையை பொறுத்தே அமையும்.

இந்த அதிநவீன அறுவைசிகிச்சையை பெற்ற பெரும்பாலான நோயாளிகள் இரண்டே வாரங்களில் தங்களது வழக்கமான உடற்திறனை பெற்றுவிடுவார்கள்.

ரோபோடிக் பைபாஸ் சிகிச்சைக்கு அப்போலோ மருத்துவமனையை நீங்கள் என் தேர்வு செய்ய வேண்டும்?

வழக்கமான பைபாஸ் சிகிச்சைகள் சிறந்த பலன்களை வழங்கினாலும், அப்போலோ மருத்துவமனையின் தலைசிறந்த இருதய அறுவைசிகிச்சை நிபுணர்கள், அதிநவீன சிறுதுளி அறுவைசிகிச்சைகளான ரோபோ-அசிஸ்டெட் பைபாஸ் போன்றவற்றை வழங்குவதில் முன்னோடிகளாக விளங்குகிறார்கள். நோயாளிகளுக்கு புதுவாழ்வு வழங்கும் இந்த சிகிச்சைகளில் பக்கவிளைவுகளும் அபாயங்களும் மிகக்குறைவு.

உலகம் முழுவதும் வெகுசில மையங்களில் மட்டுமே இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. சென்னை க்ரீம்ஸ் சாலை, அப்போலோ மருத்துவமனையில் Dr M M யூசுஃப் அவர்களின் தலைமையிலான மருத்துவர் குழு சிறப்பான பலன்களுடன் இந்த அதிநவீன சிகிச்சையை வழங்கி வருகிறது.

தொடர்பு கொள்ளுங்கள்
Copyright - 2020. Apollo Hospitals Group. All Rights Reserved.